Notation Scheme

சலமேலரா - ராகம் மார்க3 ஹிந்தோ3ளம் calamElarA - rAga mArgahindOLaM

English Version
Language Version

பல்லவி
சலமேலரா ஸாகேத ராம

அனுபல்லவி
வலசி ப4க்தி மார்க3முதோனு நின்னு
வர்ணிஞ்சுசுன்ன 1நாதோ (ச)

சரணம்
எந்து3 போது3 நேனேமி ஸேயுது3னு
2எச்சோட நே மொர பெட்டுது3னு
33ந்த3னலதோ ப்ரொத்3து3 போவலெனா
தாள ஜாலரா த்யாக3ராஜ நுத (ச)


பொருள் - சுருக்கம்
சாகேதராமா! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

விரும்பி, பத்தி நெறியுடனுன்னை வருணித்துக்கொண்டிருக்கும் என்னிடம் சினமேனய்யா?
எங்கு செல்வேன்? நானேது செய்வேன்? எவ்விடத்தில் நான் முறையிடுவேன்?
(உனது) ஏய்த்தல்களுடன் பொழுது போகவேண்டுமா? தாளவியலேனய்யா.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சலமு/-ஏலரா/ ஸாகேத/ ராம/
சினம்/ ஏனய்யா/ சாகேத/ ராமா/


அனுபல்லவி
வலசி/ ப4க்தி/ மார்க3முதோனு/ நின்னு/
விரும்பி/ பத்தி/ நெறியுடன்/ உன்னை/

வர்ணிஞ்சுசு-உன்ன/ நாதோ/
வருணித்துக்கொண்டிருக்கும்/ என்னிடம்/ சினம் ..


சரணம்
எந்து3/ போது3/ நேனு/-ஏமி/ ஸேயுது3னு/
எங்கு/ செல்வேன்/ நான்/ ஏது/ செய்வேன்/

எச்சோட/ நே/ மொர/ பெட்டுது3னு/
எவ்விடத்தில்/ நான்/ முறை/ இடுவேன்/

3ந்த3னலதோ/ ப்ரொத்3து3/ போவலெனா/
ஏய்த்தல்களுடன்/ பொழுது/ போகவேண்டுமா/

தாள/ ஜாலரா/ த்யாக3ராஜ/ நுத/
தாள/ இயலேனய்யா/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நாதோ - நாபை
2 - எச்சோட நே - எச்சோடனி

மேற்கோள்கள்

விளக்கம்
3 - 3ந்த3னலதோ - ஏய்த்தல்களுடன் - இச்சொல், இவ்விடத்தில் தியாகராஜருக்கும் பொருந்தும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் இச்சொல் இறைவனைக் குறிப்பதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இங்கும் அவ்வகையிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சாகேத - அயோத்தி நகர்
எவ்விடத்தில் - யாரிடத்தில்
Top