பல்லவி
வினதா ஸுத வாஹனுடை3
வெட3லெனு காஞ்சி வரது3டு3
அனுபல்லவி
வனஜாஸனாதி3 ஸுருலு
ஸனகாதி3 முனுலு கொலுவ (வினதா)
சரணம்
நெர வைஸா1கோ2த்ஸவமுன ஸ1த தி3ன-
கருலுத3யிஞ்சிரோயன பஸ்1சிம
கோ3புர த்3வாரமுன சராசரமுலகு
வர த்யாக3ராஜுகு வக3 தெலுப (வினதா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ வாஹனுடை3/
வினதை/ மைந்தனின்/ வாகனத்தினனாகி/
வெட3லெனு/ காஞ்சி/ வரது3டு3/
எழுந்தருளினன்/ காஞ்சி/ வரதன்/
அனுபல்லவி
வனஜ-ஆஸன/-ஆதி3/ ஸுருலு/
மலரோன்/ முதலான/ வானோர்களும்/
ஸனக/-ஆதி3/ முனுலு/ கொலுவ/ (வினதா)
சனகர்/ முதலான/ முனிவர்களும்/ சேவிக்க/ வினதை...
சரணம்
நெர/ வைஸா1க2/-உத்ஸவமுன/ ஸ1த/
சிறப்புமிக்க/ வைகாசி/ திருவிழாவினில்/ நூறு/
தி3னகருலு/-உத3யிஞ்சிரோ/-அன/ பஸ்1சிம/
பகலவர்கள்/ உதித்தனரோ/ யென/ மேற்கு/
கோ3புர/ த்3வாரமுன/ சர/-அசரமுலகு/
கோபுர/ வாயிலில்/ அசைவன/ அசையாதவற்றிற்கும்/
வர/ த்யாக3ராஜுகு/ வக3/ தெலுப/ (வினதா)
சீர்/ தியாகராசனுக்கும்/ வழி/ காட்ட/ வினதை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய (தியாகராஜருடைய) ஓரிரு சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினதை மைந்தன் - கருடன்
மலரோன் - பிரமன்
Top