பல்லவி
ஏடி 1யோசனலு ஜேஸேவுரா
எது3ரு பல்குவாரெவரு லேருரா
அனுபல்லவி
நோடி மாட ஜார்சக3 ராது3ரா
கோடி வேல்புலலோ மேடியைன நீ(வேடி)
சரணம்
மெண்டு3 ஸூ1ருலலோ வெனுக தீயவனி
2ரெண்டு3 மாடலாடே3 வாடு3 3காத3னி
அண்ட3 கோட்ல பாலிஞ்சு வாட3னி
சண்ட3 மௌனுலாட3 4த்யாக3ராஜ நுத (ஏடி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏடி/ யோசனலு/ ஜேஸேவுரா/
என்ன/ யோசனைகள்/ செய்கின்றாயய்யா/
எது3ரு/ பல்குவாரு/-எவரு/ லேருரா/
எதிர்/ சொல்பவர்/ எவரும்/ இலரய்யா/
அனுபல்லவி
நோடி/ மாட/ ஜார்சக3/ ராது3ரா/
வாய்/ சொல்/ தவறல்/ ஆகாதய்யா/
கோடி/ வேல்புலலோ/ மேடியைன/ நீவு/-(ஏடி)
கோடி/ தெய்வங்களில்/ மிக்குயர்ந்த/ நீ/ என்ன ...
சரணம்
மெண்டு3/ ஸூ1ருலலோ/ வெனுக/ தீயவு/-அனி/
எண்ணிறந்த/ சூரர்களில்/ பின்/ வாங்கமாட்டாய்/ என/
ரெண்டு3/ மாடலு/-ஆடே3 வாடு3/ காது3/-அனி/
இரண்டு/ சொல்/ மொழிபவன்/ அல்ல/ என/
அண்ட3/ கோட்ல/ பாலிஞ்சு/ வாடு3/-அனி/
அண்டங்கள்/ கோடி/ ஆள்பவன்/ என/
சண்ட3/ மௌனுலு/-ஆட3/ த்யாக3ராஜ/ நுத/ (ஏடி)
கடின/ தவசிகள்/ பகர/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ என்ன ..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - காத3னி - காட3னி
4 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ நுதே
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - யோசனலு - சில புத்தகங்களில் இச்சொல் 'தயக்கம்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பேச்சு வழக்கில் அத்தகைய பொருள்பட வழங்கினாலும், இச்சொல்லின் பொருள் 'ஆலோசனை' அல்லது 'சிந்தித்தல்' ஆகும்
2 - ரெண்டு3 மாடலாடு3 - இரண்டு சொல் மொழிதல் - சொன்ன சொல் தவறுதல்
Top